அம்பையின் முடிவு

Share this!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பீஷ்மர் விசித்திரவீர்யனுக்கு அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை மணமுடித்து வைத்தார். இந்நிலையில் ஹஸ்தினாபுரத்திலிருந்து சால்வனிடம் சென்றாள் அம்பை. ஆனால் அவளை பீஷ்மர் போரில் வெற்றி பெற்றுவிட்டபடியால் அவளை இனித் தன்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது, ஆகவே பீஷ்மரிடமே திரும்பிச் செல்லுமாறு சால்வன் மறுத்து விட்டான். பீஷ்மரிடம் திரும்பிய அம்பையிடம் பீஷ்மர், தான் திருமணம் செய்யலாகாது என்கிறபடியால் நீ சால்வனிடமே திரும்பி செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு இருமுறை பீஷ்மரிடமும், சால்வனிடமும் அம்பை மன்றாடிய பிறகும் இருவரும் அவளை ஏற்று கொள்ளாதபடியாம் அவள் பெரும் சினமுற்றாள்.

பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் சென்று முறையிட்டதால் பரசுராமர் பீஷ்மரிடம் அம்பையைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுருத்துகிறார். தன் சத்தியப் பிரதிஞ்யை விளக்கி அதனால் தன்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது என பீஷ்மர் பரசுராமரின் அறிவுறுத்தலை மறுத்தார். இதன் மூலம் குருவான பரசுராமருக்கும் பீஷ்மருக்கும் உக்கிரமாக போர் மூண்டது. இறுதியில் தர்மத்தின் மூலம் பீஷ்மரே அதில் வெற்றியும் பெற்றார். ஆதலால் பரசுராமரும் அம்பைக்கு உதவ இயலாது போயிற்று.

பீஷ்மரைப் பழிவாங்க வேண்டுமென்ற பெரும் கோபம் அம்பையை வாட்டியது. பீஷ்மரை அழிக்க வேண்டுமென்று கடும் தவம் புரிந்த அவளுக்கு முருகப்பெருமான் காட்சி தந்து மாலை ஒன்றை அளித்து, இதன் சக்தி மூலம் பீஷ்மரை வெல்ல உன்னால் முடியும் என்று வரமளிக்கிறார். அம்பை அம்மாலையைக் கொண்டு பல அரசர்களின் உதவியை நாடினாள் பீஷ்மரை எதிர்க்க. ஆனால் பீஷ்மருக்கு சந்தணு மஹாராஜ அளித்திருந்த வரம் மற்றும் பீஷ்மரின் பராக்கிரமம் அறிந்திருந்தபடியால் எந்த அரசரும் அம்பைக்கு உதவ முன்வரவில்லை. மனம் வெறுத்த அம்பை இறுதியில் பாஞ்சால தேசத்தை அடைந்த போது பாஞ்சால அரசனும் அவளுக்கு உதவ மறுக்கவே, அந்த அரண்மனைச் சுவற்றிலேயே மாலையை மாட்டி விட்டு அவ்விடம் நீங்கிக் கடும் தவம் புரியலானாள் அம்பை.

இறுதியில் பரமசிவன் அம்பைக்குக் காட்சி தந்து, அம்பை மறுபிறவியில் தக்க சமயத்தில் பீஷ்மரை வெல்வாள் என வரமளித்தார். அம்பை மறுபிறப்பு வேண்டி உடனடியாக நெருப்பில் குதித்து மாண்டு போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *