சர்ப்ப யாகம்

பரிக்ஷ்த்து மஹாராஜாவின் முடிவைப் பற்றி தனது மந்திரிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட ஜனமேஜயன், உத்தங்கர் கூறியபடி சர்ப்ப யாகம் நடத்தத் தீர்மானித்து யாக சாலைகளை நிர்மாணிக்கக் கட்டளை இட்டான். யாக சாலைகள் கட்டி முடிக்கப்பட்டவுடன் ஓர் புகழ் பெற்ற ஸ்தபதி யாக சாலைகளை நன்கு பார்த்து விட்டு, ஒரு பிராமணரின் குறுக்கீட்டால் இந்த யாகம் பாதிலேயே நின்று போகும் என்று கணித்துக் கூறினார். Read More

பரிக்ஷித்து மஹாராஜாவின் மரணம்

ரிஷிகளின் மூலம் சாபத்தைப் பற்றி அறிந்து கொண்ட பரிக்ஷித்து மஹாராஜா ஒற்றை தூணால் மாளிகை ஒன்றினை அமைத்து அதனில் தஞ்சம் புகுந்தான். அந்த ஏழு நாட்களில் ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான சுக மகரிஷியின் வாயிலாக ஸ்ரீமத் பாகவதம் உபதேசம் பெற்றான். இந்நிலையில் காஷ்யபர் என்ற முனிவர் பரிக்ஷித்துவின் சாபம் குறித்து அறிந்தார். அவருடைய மந்திர சக்தியின் மூலம் தக்ஷகனின் விஷத்தை முறித்து பரிக்ஷித்துவின் உயிர் காக்கலாம் அதன் மூலம் தனக்குப் புண்ணியமும் அரசரின் மூலமும் பொருளும் கிட்டும் என்று முடிவு செய்து பரிக்ஷித்து மஹாராஜவைக் காணக் கிளம்பினார்.
Read More