ஹஸ்தினாபுர அரசவைப் பெண்களின் புறப்பாடும், ஆச்சார்யர்களும்

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் உரிய வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு, வேதக் கல்வி வழங்கப் படலாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் விதிவசமாக பாண்டுவின் மனதில் மாத்ரியின் மேல் ஆசை உண்டாயிற்று. அதன் படி பாண்டு மாத்ரியோடு கூட ரிஷி சாபப் படி உடனே மரணமடைந்தார். இதனால் பெரிதும் மனமுடைந்த மாத்ரி, அவள் பெற்ற நகுலன், சகாதேவன் இருவரையும் குந்தியிடம் ஒப்படைத்து விட்டு ரிஷியின் வாக்குப் படியே பாண்டுவைத் தொடர்ந்து மேலுலகம் சென்றாள். Read More

ஹஸ்தினாபுர வாரிசுகள்

நிபந்தனையின் படி ஸ்ரீவேத வியாசர் தன் உடலில் மீன் நாற்றத்துடனும், இரத்தச் சிவப்பான கண்களுடனும் ஹஸ்தினாபுரம் வந்து அம்பிகையுடன் கூட வந்தார். அம்பிகை அவருடைய குரூரமான சரீரம் கண்டு அருவருப்பில் கண்களை மூடிக் கொண்டாள். வியாசரும் அவளுடன் கூடினார். பின்னர் சத்தியவதி வியாசரிடம் ஹஸ்தினாபுர இராஜ்ஜியத்தின் பெருமையை நிலைநாட்டும் பொருட்டு வீரமிக்க அரசன் பிறப்பானா என்று கேட்டாள். அதற்கு வியாசர், “அம்பிகைக்கு பத்தாயிரம் யானைகள் பலம் கொண்ட புத்திரன் ஒருவன் பிறப்பான், சாஸ்திரங்களையும் கலைகளையும் அவன் நன்கு அறிந்தவனாவான், அவனுக்கு நூறு புத்திரர்கள் பிறப்பார்கள். எனினும் அம்பிகை விருப்பமில்லாது கண்களை மூடிக் கொண்டாள் ஆக அவனுக்குப் பார்வை இராது”, என்று கூறினார். Read More

அரசனற்ற ஹஸ்தினாபுரமும் வியாசரின் நிபந்தனையும்

விசித்திரவீர்யனுக்கும், அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கும் திருமணம் நடந்தேரியது. ஆயினும் புத்திர பாக்கியம் ஏதுமின்றி விசித்திரவீர்யன் சில காலத்திலேயே இறந்து போனான். ஹஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசினின்றி இருப்பதைக் கண்ட சத்தியவதியும் பிதாமகர் பீஷ்மரும் கவலையுற்றனர். இராஜ்ஜியத்தின் நலன் கருதி பீஷ்மரிடம் சத்தியவதி அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவருக்கும் புத்திர தானம் செய்யுமாரும் ஹஸ்தினாபுரத்தின் அரசனாய் முடிச்சூடுமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் தான் செய்த சத்தியத்தில் உறுதியாக இருந்த பீஷ்மர், “தாங்கள் என்னிடம் கேட்பது இராஜ்ஜியத்தின் நன்மைக்காக என்ற உன்னத நோக்கத்திற்காக என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும் என்னால் என் சத்தியத்தை மீற இயலாது. இயற்கை தன் குணத்தினை மாற்றி கொண்டாலும் பீஷ்மன் ஒரு போதும் சத்தியம் தவற மாட்டான்” என்று சத்தியவதியின் கோரிக்கையை நிராகரித்தார். Read More

பீஷ்மர்

தன் பெயருக்கான காரணத்தை விளக்கிய சத்தியவதியின் மீது சந்தணு மஹாராஜாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்தது. அவர் அதனை அவளிடம் வெளிப்படுத்த, அதற்கு தன் தந்தையே முடிவு செய்தல் வேண்டும் என்றும் தான் முடிவெடுக்க இயலாது என்று சத்தியவதி கூறுகிறாள். அவளின் மொழி கேட்ட பின் சந்தணு அந்த மீனவர் தலைவரைச் சந்தித்து சத்தியவதியை மணம் முடித்துக் கொள்ள தன் ஆசையைத் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கு அந்த மீனவர் தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. Read More

ஸ்ரீ வேத வியாசர்

இவ்வாறு இருக்க ஒரு நாள் சந்தணு மஹாராஜா யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது நல்ல மணம் வீசியது. சுற்றும்முற்றும் அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடலானார். அப்போது அங்கு பரிசல் இயக்கிக் கொண்டிருந்த பெண்ணை மட்டும் கண்டார். அவளிடமே இருந்து அவ்வாசம் வருகிறது என்று கண்டு கொண்டார். அவளருகில் சென்று “நீ யார், எவ்வாறு உன் உடலில் இருந்து இவ்வகை வாசம் வீசுகிறது” என்று கேட்டார். அவள் மீனவ குலத் தலைவரின் மகள் என்றும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரிசல் இயக்குவதாகவும் கூறினாள். Read More