பரிக்ஷித்து மஹாராஜாவின் மரணம்

ரிஷிகளின் மூலம் சாபத்தைப் பற்றி அறிந்து கொண்ட பரிக்ஷித்து மஹாராஜா ஒற்றை தூணால் மாளிகை ஒன்றினை அமைத்து அதனில் தஞ்சம் புகுந்தான். அந்த ஏழு நாட்களில் ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான சுக மகரிஷியின் வாயிலாக ஸ்ரீமத் பாகவதம் உபதேசம் பெற்றான். இந்நிலையில் காஷ்யபர் என்ற முனிவர் பரிக்ஷித்துவின் சாபம் குறித்து அறிந்தார். அவருடைய மந்திர சக்தியின் மூலம் தக்ஷகனின் விஷத்தை முறித்து பரிக்ஷித்துவின் உயிர் காக்கலாம் அதன் மூலம் தனக்குப் புண்ணியமும் அரசரின் மூலமும் பொருளும் கிட்டும் என்று முடிவு செய்து பரிக்ஷித்து மஹாராஜவைக் காணக் கிளம்பினார்.
Read More

ஸ்ருங்கி பரிக்ஷித்து மஹாராஜாவை சபித்தல்

அஸ்தினாபுரம் வந்தடைந்த உத்தங்கர் ஜனமேஜயனைச் சந்தித்தார்.

ஜனமேஜயனிடம் உனது தந்தையாகிய பரீக்ஷித்து மஹாராஜா தர்ம எண்ணம் கொண்டவர். அவருடைய ஆட்சியில் விதவைகளும், கர்ப ஸ்த்ரீக்களும் பாதுகாப்பாக இருந்தனர். மக்களின் வாழ்வு மேம்பட சிறப்பாக ஆட்சி புரிந்தவர். ஆனால் அவரை தக்ஷகன் என்ற பாம்புகளின் அரசன் தீண்டிக் கொன்று விட்டான். Read More