சந்தணு மஹாராஜா

புமன்யூவிற்குப் பிறகு பல அரசர்கள் பாரதத்தை ஆண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர் அரசர் பிரதீபன். ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் வேதம் ஓதிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தேவலோக மங்கை அவரின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். பிரதீபன் அவரிடம், “நீ என் வலது தொடையில் அமர்ந்தமையால் எனக்கு மகள் அல்லது மருமகள் ஸ்தானத்தை அடைபவளாகிறாய். ஆகையால் உன்னை என் மகனுக்கு மணமுடிப்பேன்” என்று கூறினார். அதற்கு அவள் “உங்கள் மகன் நான் செய்யும் செயல்கள் எதையும் எதிர்த்துக் கேள்விகள் எழுப்பக் கூடாது, இந்த நிபந்தகைக்குக் கட்டுப்பட்டால் அவனை மணக்கச் சம்மதிக்கிறேன்” என்றாள். Read More