சித்ராங்கதனும் விசித்திரவீர்யனும்

பின் சத்தியவதிக்கும் சந்தணுவுக்கும் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீர்யன் என இரு புத்திரர்கள் பிறந்தனர். சில காலத்திலேயே சந்தணு சொர்க்கம் புறப்பட்டு விட்டார். பின்னர் சித்ராங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து வைக்கப்பட்டது. ஆனால் சித்ராங்கதன் என்ற பெயருடைய கந்தர்வன் ஒருவன் சந்தணுவின் மகனான சித்ராங்கதனைக் பகை எதுவும் இன்றி ஒரே பெயரை உடைய காரணத்திற்காக போருக்கு அழைத்தான். மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்த அந்தப் போரில் கந்தர்வன் சந்தணுவின் மகனைக் கொன்று விட்டான். ஆதலினால் பீஷ்மர் விசித்திரவீர்யனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கினார். Read More

பீஷ்மர்

தன் பெயருக்கான காரணத்தை விளக்கிய சத்தியவதியின் மீது சந்தணு மஹாராஜாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்தது. அவர் அதனை அவளிடம் வெளிப்படுத்த, அதற்கு தன் தந்தையே முடிவு செய்தல் வேண்டும் என்றும் தான் முடிவெடுக்க இயலாது என்று சத்தியவதி கூறுகிறாள். அவளின் மொழி கேட்ட பின் சந்தணு அந்த மீனவர் தலைவரைச் சந்தித்து சத்தியவதியை மணம் முடித்துக் கொள்ள தன் ஆசையைத் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கு அந்த மீனவர் தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. Read More

ஸ்ரீ வேத வியாசர்

இவ்வாறு இருக்க ஒரு நாள் சந்தணு மஹாராஜா யமுனைக் கரைக்குச் சென்றார். அப்போது நல்ல மணம் வீசியது. சுற்றும்முற்றும் அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தேடலானார். அப்போது அங்கு பரிசல் இயக்கிக் கொண்டிருந்த பெண்ணை மட்டும் கண்டார். அவளிடமே இருந்து அவ்வாசம் வருகிறது என்று கண்டு கொண்டார். அவளருகில் சென்று “நீ யார், எவ்வாறு உன் உடலில் இருந்து இவ்வகை வாசம் வீசுகிறது” என்று கேட்டார். அவள் மீனவ குலத் தலைவரின் மகள் என்றும், இக்கரையிலிருந்து அக்கரைக்கு பரிசல் இயக்குவதாகவும் கூறினாள். Read More

தேவவிரதன்

பிரபாசா என்ற வசு சந்தணு – கங்காதேவிக்குப் பிறந்த பின்னர் கங்கையால் அழைத்துச் செல்லப்பட்டு நன்முறையில் வளர்க்கப்பட்டான். கங்கையின் புத்திரனாதலால் காங்கேயன் என்ற பெயரிலும் தேவவிரதன் என்ற பெயரில் அறியப்பட்டான். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்த சந்தணு மஹாராஜா மான் ஒன்றினை துரத்திக் கொண்டு சென்றார். அப்போது நதிகளில் பிரதான நதியான கங்கை வற்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். Read More

சந்தணு மஹாராஜா

புமன்யூவிற்குப் பிறகு பல அரசர்கள் பாரதத்தை ஆண்டார்கள். அவர்கள் வழியில் வந்தவர் அரசர் பிரதீபன். ஒருமுறை அவர் ஆற்றங்கரையில் வேதம் ஓதிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தேவலோக மங்கை அவரின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். பிரதீபன் அவரிடம், “நீ என் வலது தொடையில் அமர்ந்தமையால் எனக்கு மகள் அல்லது மருமகள் ஸ்தானத்தை அடைபவளாகிறாய். ஆகையால் உன்னை என் மகனுக்கு மணமுடிப்பேன்” என்று கூறினார். அதற்கு அவள் “உங்கள் மகன் நான் செய்யும் செயல்கள் எதையும் எதிர்த்துக் கேள்விகள் எழுப்பக் கூடாது, இந்த நிபந்தகைக்குக் கட்டுப்பட்டால் அவனை மணக்கச் சம்மதிக்கிறேன்” என்றாள். Read More