பாண்டவர்கள், கௌரவர்களின் பிறப்பு

பாண்டு வன வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த பின்னர் இராஜ்ஜியம் திருதிராஷ்டிரனிடம் ஒப்படைக்கப்பட்டது. பாண்டு வனவாசம் சென்றதை அறிந்த திருதிராஷ்டிரன் இளையவனின் மீது இருந்த பாசத்தால் மனவருத்தம் கொண்டான். வனத்தில் பாண்டு மற்றும் குந்தி, மாத்ரி ஆகிய மூவரும் ரிஷிகள் உடன் காலம் கழிக்கத்துவங்கினர். தவம் பல மேற்கொண்ட பாண்டு தனக்குப் புத்திரர்கள் இல்லாததால் மேலுலகம் கிட்டாது என்பதை அறிந்து வருந்தினான். பின்னர் குந்தி தேவியிடம் க்ஷத்திரியர்கள் இராஜ்ஜிய நலனைக் கருத்தில் கொண்டு சந்ததி உற்பத்திக்காக கணவர் தவிர்த்து வேற ஆண்களோடு காமம் கருதாது கூடுவது தர்மத்திற்கு விரோதம் இல்லை என்று பாண்டு எடுத்துரைத்தான். Read More

இளவரசர்களின் திருமணமும் பாண்டுவிற்குக் கிட்டிய சாபமும்

காந்தாரி

திருதிராஷ்டிரனுக்கும் காந்தார தேசத்து இளவரசி காந்தாரிக்கும் பீஷ்மரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருதிராஷ்டிரன் பார்வையற்றவன் என்பதை அறிந்த காந்தாரி தானும் தன் கண்ணை துணியால் மூடிக் கொண்டாள். உலகைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தியாகம் செய்தமையால் காந்தாரியின் கண்கள் நிரந்தரமாகப் பார்வையை இழந்திற்று. Read More

அரசனற்ற ஹஸ்தினாபுரமும் வியாசரின் நிபந்தனையும்

விசித்திரவீர்யனுக்கும், அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கும் திருமணம் நடந்தேரியது. ஆயினும் புத்திர பாக்கியம் ஏதுமின்றி விசித்திரவீர்யன் சில காலத்திலேயே இறந்து போனான். ஹஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசினின்றி இருப்பதைக் கண்ட சத்தியவதியும் பிதாமகர் பீஷ்மரும் கவலையுற்றனர். இராஜ்ஜியத்தின் நலன் கருதி பீஷ்மரிடம் சத்தியவதி அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவருக்கும் புத்திர தானம் செய்யுமாரும் ஹஸ்தினாபுரத்தின் அரசனாய் முடிச்சூடுமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் தான் செய்த சத்தியத்தில் உறுதியாக இருந்த பீஷ்மர், “தாங்கள் என்னிடம் கேட்பது இராஜ்ஜியத்தின் நன்மைக்காக என்ற உன்னத நோக்கத்திற்காக என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும் என்னால் என் சத்தியத்தை மீற இயலாது. இயற்கை தன் குணத்தினை மாற்றி கொண்டாலும் பீஷ்மன் ஒரு போதும் சத்தியம் தவற மாட்டான்” என்று சத்தியவதியின் கோரிக்கையை நிராகரித்தார். Read More

அம்பையின் முடிவு

பீஷ்மர் விசித்திரவீர்யனுக்கு அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை மணமுடித்து வைத்தார். இந்நிலையில் ஹஸ்தினாபுரத்திலிருந்து சால்வனிடம் சென்றாள் அம்பை. ஆனால் அவளை பீஷ்மர் போரில் வெற்றி பெற்றுவிட்டபடியால் அவளை இனித் தன்னால் திருமணம் செய்து கொள்ள இயலாது, ஆகவே பீஷ்மரிடமே திரும்பிச் செல்லுமாறு சால்வன் மறுத்து விட்டான். பீஷ்மரிடம் திரும்பிய அம்பையிடம் பீஷ்மர், தான் திருமணம் செய்யலாகாது என்கிறபடியால் நீ சால்வனிடமே திரும்பி செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு இருமுறை பீஷ்மரிடமும், சால்வனிடமும் அம்பை மன்றாடிய பிறகும் இருவரும் அவளை ஏற்று கொள்ளாதபடியாம் அவள் பெரும் சினமுற்றாள். Read More

சித்ராங்கதனும் விசித்திரவீர்யனும்

பின் சத்தியவதிக்கும் சந்தணுவுக்கும் சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீர்யன் என இரு புத்திரர்கள் பிறந்தனர். சில காலத்திலேயே சந்தணு சொர்க்கம் புறப்பட்டு விட்டார். பின்னர் சித்ராங்கதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து வைக்கப்பட்டது. ஆனால் சித்ராங்கதன் என்ற பெயருடைய கந்தர்வன் ஒருவன் சந்தணுவின் மகனான சித்ராங்கதனைக் பகை எதுவும் இன்றி ஒரே பெயரை உடைய காரணத்திற்காக போருக்கு அழைத்தான். மூன்று வருடங்களுக்கும் மேலாக நடந்த அந்தப் போரில் கந்தர்வன் சந்தணுவின் மகனைக் கொன்று விட்டான். ஆதலினால் பீஷ்மர் விசித்திரவீர்யனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கினார். Read More

பீஷ்மர்

தன் பெயருக்கான காரணத்தை விளக்கிய சத்தியவதியின் மீது சந்தணு மஹாராஜாவிற்கு திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்தது. அவர் அதனை அவளிடம் வெளிப்படுத்த, அதற்கு தன் தந்தையே முடிவு செய்தல் வேண்டும் என்றும் தான் முடிவெடுக்க இயலாது என்று சத்தியவதி கூறுகிறாள். அவளின் மொழி கேட்ட பின் சந்தணு அந்த மீனவர் தலைவரைச் சந்தித்து சத்தியவதியை மணம் முடித்துக் கொள்ள தன் ஆசையைத் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கு அந்த மீனவர் தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. Read More