பரத வம்சம்

துஷ்யந்தன் கண்வரின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய பிறகு கண்வர் ஆசிரமம் திரும்பினார். அங்கு நடந்தவற்றை சகுந்தலையின் மூலமாகக் கேட்டுத் தெரிந்த கொண்டவர் துஷ்யந்தன் நன்நடத்தை கொண்ட மன்னன் என்பதால் சகுந்தலைக்கு ஆறுதல் கூறினார். துஷ்யந்தன் நிச்சயமாக வந்து அழைத்துச் செல்வான் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாதங்கள் சென்றன. சகுந்தலை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால். அவனுக்கு பரதம் எனப் பெயர் சூட்டப் பட்டது. மாதங்கள் பல கடந்தும் துஷ்யந்தன் சகுந்தலையை அழைத்துச் செல்ல வரவில்லை. தன்னை துஷ்யந்தனே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த சகுந்தலையிடம், தேவர்கள், பெரியோர், அரசர், கணவர் ஆகியோரிடத்து நாமே செல்வது தகும், அவர்கள் வந்து அழைக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது என்று கண்வர் கூறினார். Read More