பர்வங்களின் விவரம்

Share this!
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மகாபாரதம் பதினெட்டு பர்வங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. “பர்வம்” என்றால் பகுதி எனக் கொள்ளலாம். இந்த பதினெட்டுப் பகுதி அல்லது பார்வங்களின் பெயர்கள்:

 1. ஆதி பர்வம்.
 2. சபா பர்வம்.
 3. வன பர்வம்.
 4. விராடா பர்வம்.
 5. உத்யோக பர்வம்.
 6. பீஷ்ம பர்வம்.
 7. துரோண பர்வம்.
 8. கர்ண பர்வம்.
 9. சல்ய பர்வாம்.
 10. சௌப்திக பர்வம்.
 11. ஸ்த்ரீ பர்வம்.
 12. சாந்தி பர்வம்.
 13. அனுசாஸன பர்வம்.
 14. ஆஸ்வமேதிக பர்வம்.
 15. ஆச்ரமவாஸிக பர்வம்.
 16. மௌஸல பர்வம்.
 17. மஹா ப்ரஸ்தானிக பர்வம்.
 18. ஸ்வர்க்காரோஹண பர்வம்.

இந்தப் பதினெட்டு பர்வங்களை ‘ஆத்ய பஞ்சகம்’ , ‘யுத்த பஞ்சகம்’ , ‘சாந்தி த்ரையம்’, ‘அந்த்ய பஞ்சகம்’ என நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். பஞ்சகம் என்றால் ஐந்தைக் கொண்டது.

ஆத்ய பஞ்சகம் – ஆரம்ப ஐந்து. யுத்த பஞ்சகம் – போர் நிகழ்வுகளை விளக்கும் ஐந்து. சாந்தி த்ரையம் – (த்ரையம் என்றால் மூன்று) போர் முடிந்து அமைதி நிலவிய நேரத்தில் நடந்த நிகழ்வுகளை பேசும் பகுதிகள். அந்த்ய பஞ்சகம் – அந்த்ய என்றால் இறுதியான அதாவன் கடைசி ஐந்து.

இதில் ஆதி பர்வம் முதல் உத்யோக பர்வம் முடிய ஆதி பஞ்சகம். பீஷ்ம பர்வம் முதல் சௌப்திக பர்வம் முடிய – யுத்த பஞ்சகம். ஸ்த்ரீ பர்வம் முதல் அனுசாஸன பர்வம் முடிய சாந்தி த்ரையம். ஆஸ்வமேதிக பர்வம் முதல் ஸ்வர்க்காரோஹண பர்வம் முடிய அந்த்ய பஞ்சகம்.

இந்த பதினெட்டு பர்வங்களில் ஒவ்வொன்றும் மேலும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு பர்வத்துக்கும் பிரிவு உண்டு. இதற்கு “அவாந்தர பர்வங்கள்” என்று பெயர். “உள்ளடங்கிய” என்று பொருள் கொள்ளலாம். அவற்றின் அமைப்பு பார்க்கலாம்.

பர்வங்களும் அவாந்திர பர்வங்களும்:

 • ஆதி பர்வம் – பத்தொன்பது
 • சபா பர்வம் – எட்டு
 • வன பர்வம் – இருபத்திஒன்று
 • விராட பர்வம் – ஐந்து
 • உத்யோக பர்வம் – பத்து
 • பீஷ்ம பர்வம் – ஒன்று
 • சல்ய பர்வம் – மூன்று
 • சௌப்திக பர்வம் – இரண்டு
 • ஸ்த்ரீ பர்வம் – மூன்று
 • சாந்தி பர்வம் – மூன்று.
 • அனுசாஸன பர்வம் – இரண்டு.
 • ஆஸ்வமேதிக பர்வம் – மூன்று.
 • ஆச்ரமவாஸிக பர்வம் – மூன்று
 • மௌஸஸ – ஒன்று.
 • மஹாப்ரஸ்தானிக பர்வம் – ஒன்று.
 • ஸ்வர்க்காரோஹண பர்வம் – ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *